போலீஸ் வேடத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை : 8 பேர் கைது

பெங்களூர் : டிசம்பர். 20 – போலீசார் வேடத்தில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி 700 கிராம் தங்க நகைகள் மற்றும் 60 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அபகரித்து தப்பியோடியிருந்த எட்டு பேரை பீன்யா போலீசார் கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். பீன்யா எச் எம் டி லே அவுட்டில் எஸ் என் ஆர் பாலிபிலிம்ஸ் பேகஜிங்க் நிறுவன உரிமையாளர் மனோகர் என்பாரின் வீட்டுக்கு கடந்த டிசம்பர் 4 அன்று இரவு 7.30 மணியளவில் ஒருவன் கதவை தட்டியுள்ளான். வீட்டுக்குள் இருந்த மனோகரின் மனைவி சுஜாதா மற்றும் மகன் ரூபேஷ் கதவை திறந்தபோது அவன் தன்னை போலீஸ் என அறிமுகப்டுத்திக்கொண்டுள்ளான். மனோதர் வீட்டில் அண்ணன் தம்பி தகராறு இருந்துள்ளது. இது விஷயமாக போலீசார் வந்திருக்கக்கூடும் yena வீட்டில் இருந்தவர்கள் நினைத்துள்ளனர். இவர்கள் கதவை திறந்த உடனேயே ஒருவர் பின் ஒருவராக ஐந்தாறு பேர் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர் . பின்னர் இவர்கள் ரூபேஷ் மற்றும் சுஜாதாவை தாக்கி வீட்டில்
இருந்த நகை மற்றும் ரொக்கத்தை அபகரித்துக்கொண்டு தப்பியோடியிருந்தனர். பின்னர் தடயங்களை அழிக்க வீட்டில் இருந்த சி சி டி வி காமிராக்களையும் அபகரித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மனோகர் பீன்யா போலீசில் புகார் அளித்தார் . பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட ஆய்வுகளின் பேரில் இப்போது எட்டு பேரை கைது செய்துள்ளனர். ஆனால் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள சி சிடிவிக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் வந்த வாகனம் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.