ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: நவம்பர். 8 –
குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் பலியானார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்த நிலையில் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பா.சிதம்பரம் கூறியதாவது:- மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. அல்லது ராஜினாமா செய்யவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.குஜராத் முதல்-மந்திரியால் ஆட்சி செய்யப்படவில்லை. டெல்லியில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை பா.ஜனதா உத்தரவுபடி செயல்படுகிறது. இதுபோன்ற அமைப்புகளால் கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.