மகனைக் கொன்ற பெண் விஞ்ஞானி

பெங்களூர் : ஜனவரி. 9 –
தனது 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்து சடலத்துடன் காரில் சென்று கொண்டிருந்த பெண் விஞ்ஞானியை போலீசார் சினிமா பாணியில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.இந்தப் பெண் பெங்களூரில் ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு லேப் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பெயர் சுசனா சேத்.
செயற்கை நுண்ணறிவு பொறியாளரான இவருக்கு 39 வயது ஆகிறது.இவர் தன்னுடைய நான்கு வயது மகனை கோவாவில் கொலை செய்து விட்டு அந்த உடலுடன் கர்நாடகா வரும் போது பிடிபட்டுள்ளார். மைண்ட் புல் ஏ 1 என்ற ஸ்டார்ட் அப் செயற்கை நுண்ணறிவு மையத்தை துவங்கியுள்ள சுசனா சேத் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் தன்னுடைய பையில் அவருடைய மகனின் உடலுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னுடைய நான்கு வயது மகனை கோவா வடக்கு பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் கொலை செய்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை கோவாவின் சோல் பான்யன் கிராண்ட் என்ற ஓட்டலுக்குள் தன் மகனுடன் நுழைந்துள்ளார்.

பின்னர் திங்கட்கிழமை ஓட்டலை விட்டு தனியாக வெளியே வந்த அவர் ஓட்டல் ஊழியர்களிடம் பெங்களூருக்கு வாகனம் பதிவு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இவருக்கு விமான பயணம் ஏற்படுத்தி தருவதாக ஊழியர்கள் கூறினும் தனக்கு டாக்சியே போதும் என வற்புறுத்தியுள்ளார்.ஆனால் இவருடைய மகன் இவருடன் இல்லை என்பதை கவனித்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர் . பின்னர் இவர் தங்கியிருந்த அறையில் ரத்த கரைகளும் தென்பட்டுள்ளது . இது குறித்து ஓட்டல் நிர்வாகம் உடனே போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் வாகன ஓட்டுனரை தொடர்பு கொண்டு சுசனா சேத்திடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளனர். போலீசார் அவருடைய மகன் பற்றி கேட்டபோது அவர் அவன் வேறொரு முகவரியில் இருப்பதாக தெரிவித்த நிலையில் போலீஸ் மேற்கொண்ட ஆய்வில் அந்த முகவரி போலி என தெரியவந்துள்ளது. பின்னர் வாகன ஓட்டுனரை தொடர்பு கொண்ட போலீசார் உடனே வாகனத்தை அருகில் சித்ரதுர்காவில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து சேர்க்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சோதனையின்போது சுசானா கொண்டு வந்திருந்த பையில் மகனின் இறந்த உடல் இருப்பது கண்டு உடனே அவரை போலீசார் கைது செய்துள்ளனர் . இவர் மிகுந்த தொழில்நுட்ப விஞ்ஞானி மட்டுமின்றி ஹார்வார்டு பல்கலைக்கழக உறுப்பினாராகவம் இருந்துள்ளது விசாரணையில்தெரிய வந்துள்ளது. . இவர் தனது மகனை ஈவு இரக்கம் இன்று கொலை செய்துவிட்டு ஒரு பையில் மகன் சடலத்துடன் காரில் பெங்களூருக்கு வந்தது ஏன் என்று உடனடியாக தெரியவில்லை இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவா ஓட்டலில் இருந்து இவர் காரில் சென்ற பிறகு அறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் அங்கிருந்து ரத்த கரையை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர் பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு அந்த பெண் இங்கிருந்து எப்படி சென்றார் என விசாரணை நடத்தி உள்ளனர் அப்போது வாடகை டாக்ஸி காரில் சென்றார் என ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது உடனடியாக டாக்ஸி டிரைவரை போலீசார் தொடர்பு கொண்டனர் அப்போது டாக்ஸி சித்திரதுர்கா அருகே சென்று கொண்டு இருந்தது. அந்தப் பெண்ணிடம் போலீசார் செல்போனில் பேசினர் ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை. இதைத்தொடர்ந்து காரை சித்திரத்துர்கா போலீஸ் நிலையத்திற்கு திருப்புமாறு டிரைவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கார் போலீஸ் நிலையம் வந்தது. அப்போது அந்தப் பெண்ணை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் அந்த காரில் அவரது மகன் சடலம் பையில் வைக்கப்பட்டு இருந்தது. கொலை செய்துவிட்டு ஓட்டலில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றபோது அவர் பெங்களூர் சென்று சேரும் முன்பே சினிமா பாணியில் துப்பு துலக்கி நடுவழியில் போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது