மகனை கொன்று தாய் தற்கொலை

பெங்களூர் : செப்டம்பர் . 14 – மகனை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நகரின் ஹோசகுட்டதஹள்ளியில் நடந்துள்ளது. இன்று அதிகாலை நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஹோசகுட்டதஹள்ளியை சேர்ந்த 13 வயது மகன் மதனை தூக்கில் தொங்க வைத்து பின்னர் அவனுடைய தாயும்தற்கொலை செய்துகொண்டுள்ளாள் என டி சி பி லக்ஷ்மன் லிம்பரகி தெரிவித்தார். 48 வயதான தாய் லக்ஷ்மம்மா தற்கொலை செய்து கொண்ட தாயாவார் . இந்த இரட்டை தற்கொலைக்கு காரணம் இன்னும் தெரிய வரவில்லை. சம்பவ இடத்திற்கு பைட்டராயணபுரா போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். பொலிஸாரின் விசாரணைக்கு பின்னரே இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என தெரிகிறது.