மகர விளக்கு காலத்தில் தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம், அக். 8- மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களின் துவக்கத்தில் சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலம் அடுத்த மாதம், 16ல் துவங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாததால் சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள், நவ., 16ல் துவங்குகிறது. துவக்கத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வரை, அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தால் நிலைமையை ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும்,
மேலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இம்முறை சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு, ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அய்யப்பனை தரிசித்த பின், பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.