மகளிடம் தகராறு தட்டி கேட்ட தந்தையை கொன்ற நபர் கைது

பெங்களூர் : செப்டம்பர். 4 – என் மகளின் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என புத்தி சொல்ல சென்றிருந்த தந்தையையே கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருந்த குற்றவாளியை அசோக் நகர் போலீசார் கைது செய்து அவனிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மின் கருவிகள் கடையில் பணியாற்றிவந்த ஜஹீத் (22) என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியாவான். சரக்கு வாகன ஓட்டுனராயிருந்த நஞ்சப்பா ரவுண்டானா அருகில் வசித்துவந்த அன்வர் ஹுஸேன் என்பவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருந்த கொலையாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஹூசேனின் 15 வயது மக்களிடம் ஜஹீத் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திவந்துளான் . அவள் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அவளை பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திவந்துள்ளான் . கடந்த மூன்று நான்கு மாதங்களாக இந்த விவகாரம் நடந்து வந்த நிலையில் சிறுமி இது குறித்து தன தந்தையிடம் தெரிவித்துள்ளான். அப்போது கொலையுண்ட சிறுமியின் தந்தை ஜாஹீத்திடம் தன் மகளுடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாத ஜாஹீத் சிறுமியை தொடர்ந்து பலவந்த படுத்த துவங்கியுள்ளான் .கடந்த சனிக்கிழமை அன்றும் ஜாஹீத் சிறுமியை பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தது குறித்து சிறுமி தன் தந்தையிடம் தெரிவித்துள்ளாள் . இரவு 9 மணியளவில் சிறுமியின் தந்தை ஹுசேன் ஜாஹீதின் வீட்டுக்கு சென்று அவனுக்கு எதிராக அவனுடைய பெற்றோர் மற்றும் சகோதரனிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு குடும்பங்களுக்கடியையே பலத்த வாக்குவாதங்கள் நடந்துள்ளது . பின்னர் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து ஜாஹீத் ஹுசேனை கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடியுள்ளான். . ஹெசேனை udane அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தும் சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போயுள்ளார். என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் நேற்று பிற்பகல் ஜாஹீத் இருக்கும் idam குறித்து அறிந்து அங்கு சென்று அவனை கைது செய்துள்ளனர்.