மகளிர் கழிவறையில் செல்போனில் போட்டோ எடுத்தவர் கைது

மங்களூரு, மே 8: மங்களூரு பாவாடகுடேயில் உள்ள மருத்துவக் கல்லூரியின் பெண்கள் கழிவ‌றையில் போட்டோ எடுத்த 17 வயது மைனர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மே 6ஆம் தேதி மருத்துவக் கல்லூரிக்கு நோயாளியாக வந்த மைனர் ஒருவர், பெண்கள் கழிப்பறைக்குச் சென்று செல்போனை வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது பெண்கள் கழிப்பறைக்குள் இருந்து மொபைல் அடிக்கும் சத்தம் கேட்டு சோதனையிட்டதில் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. மொபைலை கண்டெடுத்த கல்லூரி ஊழியர்கள் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, கல்லூரியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக பதினேழு வயது மைனர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.