மகளிர் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுடன் பாஜக இருக்காது: அமித்ஷா

ஹூப்பள்ளி, மே 2: பெண்களை பலாத்காரம் செய்பவர்களுடன் பாஜக இல்லை.
எங்கள் கூட்டாளிகள் இந்த செயலில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்று ஷா கோரியுள்ளார்.ஹூப்பள்ளி, நேரு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக விஜய சங்க மாநாட்டில் அவர் பேசுகையில், ‘ஒக்கலிகர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தேர்தல் முடியும் வரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டிற்கு ஓட அனுமதித்தீர்கள்.
கொடிய குற்றத்தை செய்தவர்கள் ஓடிவிட்டனர். ‘முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தலைமையிலான மாநில‌ அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.
‘கர்நாடகாவில் மஜதவுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். பிரஜ்வல் ரேவண்ணாவின் பென் டிரைவ் தொடர்பான தகவல் மிகவும் தாமதமாக வெளியே வந்தது. பாலியியல் பலாத்காரம் செய்பவர் யாராக இருந்தாலும், பாஜக‌ அவர்கள் பக்கம் இல்லை’ என்றார்.
பெங்களூரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், பிரஜ்வல் வெளிநாடு செல்லும் வரை மாநில போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர். புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்றார்.
தாவணகெரேயில் பேசிய பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னாலா, ‘பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்கும் வரை மாநில அரசு படுத்துறங்கிக் கொண்டிருந்ததா.
இந்த வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது’ என்றார்.