டெல்லி, ஆக. 15- இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை புறப்பட்டுள்ளார். அவரை வரவேற்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் ‘’சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.