மகாராஷ்டிராவில் உடையும் பாஜக கூட்டணி? என்னாச்சு

மும்பை, மார்ச் 30: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள ராம்தாஸ் அத்வாலே அதிருப்தியில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளிப்படையாகவே சில பரபர கருத்துகளைக் கூறியுள்ளார். நமது நாட்டில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள இந்த லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. பல மாநிலங்களில் பாஜக தனது தலைமையில் வலுவான ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. ராம்தாஸ் அத்வாலே: இந்தச் சூழலில் பாஜக வலிமையாக உள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. சீட் பங்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணியில் உள்ள போதிலும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தங்கள் கட்சியைப் புறக்கணிப்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிருப்தியில் இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசையும் நேரில் சந்தித்துப் பேசினார், என்னாச்சு: மகாராஷ்டிராவில் தனது இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்பதால் அவர் ஃபட்னாவிசை சந்தித்து இது தொடர்பாக நேரில் முறையிட்டு இருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுக்கு ஷீரடி தொகுதி வேண்டும் என்று கேட்டேன். ஆனால், அங்கே சிட்டிங் எம்.பி. சதாசிவ் லோகாண்டே தாக்ரே சிவசேனாவைச் சேர்ந்தவர் என்பதால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஷீரடியை கேட்பதாக ஃபட்னாவிஸ் கூறினார். ஆலோசனைக்குப் பிறகு வேறு தொகுதி கேட்போம். இந்த லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அமையும் மோடி அரசிலும் நிச்சயம் எனக்கு கேபினட் அமைச்சர் பதவிக்குக் கிடைக்கும். 2026ஆம் ஆண்டு எனக்கு ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடைகிறது. அப்போது மீண்டும் மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வாவேன் என நம்புகிறேன். ஃபட்னாவிஸ் லோக்சபா தேர்தலில் கஷ்டம் எனச் சொன்னார். இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாகவும் பேசினேன்.
அமைச்சர் பதவி தேவை: சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு ஏழு முதல் 8 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், மாநிலத்தில் அமைச்சர் பதவி தேவை. மேலும், அரசுக்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்களில் பதவிகள் வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து பாஜக தலைமையுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும். கூட்டணியில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்” என்று அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்குக் கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 23 இடங்களில் வென்ற நிலையில், அந்த கூட்டணியில் இருந்த சிவசேனா 18 தொகுதிகளில் வென்றன. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணி அங்கே வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்குக் கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 23 இடங்களில் வென்ற நிலையில், அந்த கூட்டணியில் இருந்த சிவசேனா 18 தொகுதிகளில் வென்றன. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணி அங்கே வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.