மகாராஷ்டிராவில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

புதுடெல்லி, மே 24- மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் வரும் ஜூன் 2 ம் தேதி நடைபெறும் என சிவசேனா தலைவர் பாரத் கோகவலே நேற்று தெரிவித்தார். தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தற்போதைய அமைச்சர்களுக்கு அது நிவாரணமாக இருக்கும் என்றும் கூட்டத்தொடரின் போது தற்போதைய பலத்துடன் இரு அவைகளையும் கையாள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் கூறினார்.. மற்றொரு சிவசேனா எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக்கும் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இப்போது அனைத்து தடைகளும் அகற்றப்பட்டதால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்” என்றார்.