மகாராஷ்டிராவில் 200 குவிண்டால் அபின் பறிமுதல்

நாக்பூர்: அக். 5-
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பருத்தி பயிரிடப்படும் நிலத்தில் ஓப்பியம் எனப்படும் அபின் சாகுபடி செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, கோன்சா கிராமத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு பருத்தி வயல்களுக்கு மத்தியில் ரகசியமாக அபின் பயிரிடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அபின் சாகுபடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
4 விவசாயிகள் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தில் இருந்து 200 குவிண்டாலுக்கு அதிகமாக விளைந்திருந்த அபினை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.