மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் சவால்

அகோலா (மஹாராஷ்டிரா) : நவம்பர் 17 – தைரியம் இருந்தால் தான் மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையை தடுத்து நிறுத்தட்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மஹாராஷ்டிரா அரசுக்கு சவால் விடுத்துள்ளார். சுதந்திர போராளி சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு எதிர்ப்பாக சிவசேனை மற்றும் பி ஜே பி தலைவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக கிளம்பியுள்ளனர் . இந்த நிலையில் ராகுல் காந்தி இவ்வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிலையில் வழியில் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி ஒரு கடிதத்தை காட்டி இது சார்வர்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் இந்த அரசு ஏன் பயணத்தை நிறுத்துவதாக இருந்தால் நிறுத்தட்டும் நிறுத்தட்டும். பின்னர் பார்த்துக்கொள்வோம். எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் கன்யாகுமரியிலிருந்தது காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை நடந்து வருகின்ற நிலையில் தற்போது மஹாராஷ்டிராவில் நடந்து வருகிறது