மக்களை திசை திருப்ப பிஜேபி முயற்சி

பெங்களூர் நவ.21-

கர்நாடக பிஜேபி அரசின் தோல்விகளை மறைக்க பசுவதை தடை சட்டம் மற்றும் லவ் ஜிகாத் விவகாரங்களை கையில் எடுத்து மக்களை திசை திருப்புகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது கர்நாடக பிஜேபி அரசு நிர்வாகம் முழு தோல்வி அடைந்து விட்டது இதை திசைத்திருப்ப பசுவதை தடை சட்டம் மற்றும் லவ் ஜிகாத் போன்ற விவகாரங்களை கிளப்பி உள்ளனர் காதலுக்கு ஜாதி மதம் இல்லை ஆனால் இதை ஒரு பிரச்சனையாக பிஜேபி கொண்டுவந்து அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார். கர்நாடக பிஜேபி அரசு அமைந்த பிறகு பசுவதை தடை சட்டம் கொண்டு வந்தது இப்போது லவ் ஜிகாத் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து மதம் மாற்றுவதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது