மக்கள் எதிர்ப்பால் குப்பை கொட்டுவது நிறுத்தம்

பெங்களூர், பிப். 20- பெங்களூர் வடக்கு பகுதியின் அருகே பெள்ளஹள்ளி குப்பை கிடங்கு பகுதியில், குப்பைகளை கொட்டுவதற்கு அதன் சுற்றுப்புற கிராமங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், சனிக்கிழமை முதல் குப்பைகள் கொட்ட அங்கு அனுமதிக்கப் படவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பெள்ளஹள்ளி பகுதியின் மக்கள் குப்பைகளை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, குப்பைகளை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சனிக்கிழமை முதல் அங்கு குப்பைகளை கொட்டப் படவில்லை.உலர்ந்த மற்றும் ஈரமான குப்பைகளை கொண்டு சென்று பெள்ளஹள்ளி குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம். நாள்தோறும் 300 முதல் 350 காம்பேக்ட் இயந்திரங்கள் மூலம் கொட்டப் பட்டு வந்தோம். ஒவ்வொரு காம்பேக்ட் இயந்திரங்கள் தலா 10 டன் குப்பைகளை கொண்டு செல்லும். திங்கட்கிழமை கே.ஆர். மார்க்கெட், மற்றும் சர்ச் ஸ்ட்ரீட், உட்பட பல்வேறு இடங்களில் குவியும் குப்பைகளை சேகரிக்கப் பட்டது. இதனை தான் பெங்களூர் வடக்கு பகுதியில் உள்ள பெள்ளஹள்ளி குப்பை கிடங்கில் கொட்டப்படுவதை தடுக்க பட்டதால் பெங்களூரு தெற்கு பகுதியில் குவிந்த குப்பைகள் அகற்ற முடியவில்லை. இது குறித்து பெங்களூர் திடக்கழிவு மேலாண்மை நிறுவன அதிகாரிகள், கிராம மக்களுடன் பேசி தீர்வு காண முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காம்பேக்ட்டர்கள் மூலம் கொண்டு செல்லும் குப்பைகளை கொட்டுவதற்கு கிராம மக்களை ஒத்துழைக்கும் படி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். பெள்ளஹள்ளியில் குப்பைகள் கொட்டுவதற்கு 30 ஏக்கர் நிலம் முழுமையாக குவிந்து கிடக்கின்றன. மேலும் குப்பைகளின் உயரத்தை அதிகரிக்க பெங்களூர் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் ஈடுபட்டுள்ளதை அப்பகுதி கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பெள்ளஹள்ளியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள பையப்பன ஹள்ளி பகுதியில் குப்பைகள் கொட்ட இடத்தை தேர்வு செய்து உள்ளனர். அப் பகுதி பெங்களூர் நகர மாவட்டத்துக்கு உட்பட்டது. இதன் அனுமதியை பெற திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் விவரங்களை தெரிவித்துள்ளளனர். இந்த இடத்தில் குப்பைகளை கொட்ட அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. இங்கு 2023 ல் விமான கண்காட்சி நடந்த இடமாகும். எனவே இங்கு குப்பைகள் கொட்ட அனுமதி கிடைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இந்நிலையில் பெங்களூரில் குவியும் குப்பைகளை கொண்டும் போய் கொட்டுவதற்கு பெங்களூருக்கு வெளியே வேறொரு இடத்தை அரசு தான் தேர்வு செய்து ஒதுக்க வேண்டும். அது மேலும் 30 ஆண்டுகளுக்கு குப்பைகள் அகற்றும் பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கவனிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.