மங்களூரில் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ போராட்டம்

மங்களூர்: செப்டம்பர் . 22 – தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனைகள் நடத்தி எஸ் டி பி ஐ பிரமுகர்களான அப்துல் காதர் மற்றும் அபூபக்கர் என இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நகரின் நெல்லிக்காய் வீதியில் உள்ள எஸ் டி பி ஐ , பி எஸ் ஐ அலுவலகங்கள் , கூளூரு , காவூரு , உப்பினங்கடி , பஜ்பே , கின்னிபதவு , விட்ல போலந்தூரு , ஆகிய இடங்களில் பிரமுகர்களின் வீடுகள் , புத்தூர் மற்றும் பாண்ட்யாளில் உள்ள அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் போது பல ஆவண பத்திரங்கள் , கைப்பற்றப்பட்டு அவை பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. மங்களூரில் சோதனைகளின் போது பி எப் ஐ , எஸ் டி பி ஐ தொண்டர்கள் கூட்டம் சேர்ந்து இந்த சோதனைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளனர். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். தக்ஷிண கன்னடா மாவட்ட போலீஸ் ஆணையர் மற்றும் மங்களூர் நகர போலீஸ் ஆணையர் தலைமையிலான போலீஸ் குழுக்கள் சோதனைகளின் போது என் ஐ ஏ அதிகாரிகளுக்கு உதவி புரிந்துள்ளன. சிவமொக்கா மற்றும் பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை 6 மணிமுதல் என் டி ஏ அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இதே வேளையில் மங்களூரில் நெல்லிக்காய் வீதியில் உள்ள பி எப் ஐ , மற்றும் எஸ் டி பி ஐ அலுவலகங்களில் அதிகாலை 3.30 மணியளவில் என் டி ஏ சோதனைகள் செய்துள்ளது. இந்த சோதனைகளுக்கு முன்னர் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டு பின்னர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தவிர இந்த இடங்களில் பல கோப்புகள் பரிசீலனை உட்பட விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த சோதனைகளை கண்டித்து பி எப் ஐ தொண்டர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நெல்லிக்காய் வீதியை முழுதுமாக மூடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரை ரிசர்வ் படைகள் ,இந்த இடங்களில் கடும் எச்சரிக்கை வகித்து வருகின்றன. பி எப் ஐ , எஸ் டி பி ஐ பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருகிறது. பி எஸ் ஐ தலைவரான ஷரீப் பஜ்ஜே, அஷ்ரப் ஜோகட்டே , மொய்தீன் ஹலேயங்கடி , நவாஸ் கபூர் மற்றும் காதர் குளாயி ஆகியோர் வீடுகள் உட்பட மொத்தம் எட்டு இடங்களில் என் ஐ ஏ சோதனைகள் மேற்கொண்டுள்ளது. இதே வேளையில் கேரளாவில் பி எப் ஐயின் பல அலுவலகங்கள் மீதும் என் ஐ ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 50 இடங்களில் சோதனைகள் நடந்து வருவதாக பி எப் ஜ மாநில பொது செயலாளர் ஏ அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பாப்புலர் பிரென்ட் இயக்க தலைவர்களின் வீடுகளில் மத்திய துறைகளான என் ஐ ஏ மற்றும் அமலாத்துறையினர் நள்ளிரவு சோதனைகள் மேற்கொண்டிருப்பது அத்துமீறல்களுக்கு உதாரணமாயுள்ளது எனவும் இவர் தெரிவித்துள்ளார். தேசிய , மாநில மற்றும் உள்ளூர் மட்ட தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்து வருவதாகவும் மாநில சமிதி அலுவலகத்திலும் சோதனைகள் நடந்து வருகிறது. இதன் வாயிலாக கருத்து பேத குரல்களை அடக்க இந்த துறைகள் பயன் படுத்தி வரும் மோசமான செயல்களை கடுமையாக எதிர்த்து போராடுங்கள் என அப்துல் சத்தார் அழைப்பு விடுத்துள்ளார். இதே வேளையில் தமிழ்நாட்டில் மதுரை , தேனீ , திண்டுக்கல் , ராமநாதபுரம் , கடலூர் , திருநெல்வேலி , மற்றும் தென்காசி உட்பட பல இடங்களில் என் டி ஏ அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டிருப்பதுடன் பி எஸ் ஐ மற்றும் என் டி பி ஐக்கு சொந்தமான சொத்துக்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. பி எஸ் ஐயின் கடலூர் மாவட்ட பிரமுகர் பயாஸ் அஹமத் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் ஆராபத் ஆகியோரிடம் என் டி ஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக பி எஸ் ஐ தொடர்பாக என் டி ஏ பத்துக்கும் மேற்பட்ட புகார்களை பதிவு செய்துள்ளது. என் டி ஏ வட்டாரங்கள் தெரிவிக்கும்படி சமீபத்திய நாட்களில் விசாரணை குழுக்கள் நாட்டில் பி எஸ் ஐயுடன் தொடர்பு கொண்ட 100க்கும் அதிகமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.