மங்களூர் அருகே படகு கவிழந்து 2 தமிழக மீனவர்கள் சாவு


மங்களூரு, ஏப். 14- அரபிக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் இரு தமிழக மீனவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
மங்களூர் அருகே அரபிக் கடலில் படகு கவிழ்ந்து 14 மீனவர்கள் காணாமல் போயினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் மீனவர் துறைமுகத்திலிருந்து 14 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருந்தனர்.
தென் கன்னடா மாவட்டம் மங்களூரில் இருந்து பல கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது.
தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அதிநவீன 3 படகுகளும் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு
மீனவர்கள் உடல்கள் காணப்பட்டது இவர்கள் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்தது.
மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த விபத்து மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.