மங்களூர் குக்கர் வெடிகுண்டுகுற்றபத்திரிகை தாக்கல் செய்ய தீவிரம்

பெங்களூர் : நவம்பர். 23 – மங்களூர் குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு துறை ( என் ஐ ஏ ) அதிகாரிகள் குற்றவாளி ஷாரீக் உட்பட நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தயாரிப்பில் உள்ளனர். ஒரு ஆயிரம் பக்கங்களுக்கும் மேற்கொண்ட குற்றப்பத்திரிகையை சிலவே நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளி ஷாரீக் , மாஜ் முனீர் , யாசின் , அராபாத் ஆகியோரின் வாக்குமூலங்களை என் ஐ ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்துள்ளனர். வெடி வைப்புக்கு எந்தெந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன , இதற்கான பயிற்சிகள் எங்கெங்கு நடந்தன , இந்த சம்பவங்களில் எவரெல்லாம் உடன் இருந்தனர் ஆகியவை விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இட மகஜரின்போது தாங்கள் பயிற்சி பெற்ற துங்கா நதி கரையின் பகுதியை ஏற்கெனவே ஷாரீக் விசாரணை அதிகாரிகளுக்கு காட்டியுள்ளான். கதிரி கோயில் வளாகத்தில் எங்கெங்கு வெடி குண்டுகள் வைக்கப்பட வேண்டும் , இதற்கான பயிற்சிகள் நடந்தது , இந்த குழுவில் யாரெல்லாம் இருந்தனர் கதிரி கோயிலுக்கு பின்னர் உடுப்பி கிருஷ்ணா மடம் , சிக்கமகளூர் பி ஜே பி அலுவலகம் , ஆகியவற்றில் வெடி குண்டுகள் வைக்கும் பொறுப்பையும் இதே ஷாரீக் மேற்கொண்டிருந்துள்ளான். தவிர வேறு சில மடங்களிலும் இவர்கள் வெடி குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தவிர இதற்கென இவர்கள் அனைவரு ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றது பற்றியும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. தவிர தங்களுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு உளவாளிகள் குறித்தும் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர் . வெடி பொருள்களை வாங்க வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் நிதியுதவிகள் வந்துள்ளன. இந்த பணத்தை கொண்டு குற்றவாளிகள் வெடிமருந்துகளை வாங்கி வந்துள்ளனர். தவிர இவர்களின் சொந்த செலவுகளுக்கும் வெளிநாட்டு உளவாளிகள் நிதியுதவி அளித்து வந்துள்ளார். இது தவிர வெளிநாட்டிலிருந்து எந்தெந்த கணக்குகளிலிருந்து பணம் வந்துள்ளது தவிர இங்கு யார் யார் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதுடன் பட்கல் கும்பலை மீறும் அளவிற்ற்கு இவர்கள் தங்கள் வலை தொடர்பை வளர்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது . கடந்த நவம்பர் 19, 2022ம் ஆண்டு மங்களூரில் நடந்த வெடி குண்டு சம்பவம் நாட்டையே உலுக்கியது . மங்களூரில் 2020ல் சுவரில் எழுதப்பட்டிருந்த தீவிரவாத ஆதரவு வாசகம் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முஹம்மத் ஷரீக் கொண்டுவந்த வெடிகுண்டு அவனுடைய தொடையிலேயே வெடித்து சிதறியது. பின்னர் அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் . கர்நாடகாவில் ஐசிஸ் மாதிரியில் நாச வேலைகளில் ஈடு பட திட்டமிட்டிருந்தது பின்னர் தெரிய வந்தது. தவிர சிவமொக்காவில் சந்தேகத்துக்குரிய தீவிரவாதி மாஸ் முனீர் அஹமத் கைது செய்யப்பட்ட நிலையில் ஷாரீக் அங்கிருந்து தப்பித்து மங்களூர் , மைசூர் , கேரளா , மற்றும் தமிழ்நாடுகளில் திரிந்து வந்துள்ளான். ஹிந்து வேடமணிந்து மைசூரில் வாடகை வீடு எடுத்து அங்கிருந்து தன் தீவிரவாத நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளதாகவும் என் ஐ ஏ தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.