மசூத் கொலைக்கு பழிக்கு பழியாக பிரவீன் நெட்டாரு கொலை

மங்களூர், நவம்பர் 14 – பெல்லாரேவில் நடந்த மசூத் கொலைக்கு பழிக்கு பழியாக பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (பி எப் ஐ ) சதி திட்டம் தீட்டி பிரவீன் நெட்டாருவை கொலை செய்திருப்பது தேசிய புலனாய்வு முகமம் (என் ஐ ஏ ) விசாரணையில் தெரியவந்துள்ளது. மசூத் கொலைக்கு பின்னர் அதற்க்கு பதிலடியாக மற்றொரு கொலை செய்து சமுதாயத்தில் பீதியை கிளப்பும் நோக்கில் பி எப் ஐ திட்டம் தீட்டியது . சிலவே நாட்களில் பி எப் ஐ தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சதி திட்டம் தீட்டி பிரவீன் நெட்டாருவை குறியாக வைத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதான ஷஹீத் வீட்டில் கூட்டம் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரவீன் நெட்டாருவை திட்டம் தீட்டி கொலை செய்து பழி தீர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பிரவீன் நெட்டாரு கொலை தொடர்பாக ஷஹீத் பெல்லாரே கைதாகியிருப்பதுடன் இந்த கொலையில் இது வரை கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது .