மஞ்சளுக்கு விலை குவிண்டால் 16 முதல் 20 ஆயிரத்திற்கு விற்பனை

சாமராஜநகர் : மார்ச். 15 – மழை குறைவு காரணமாக மஞ்சள் பயிரிடும் பகுதிகள் குறைந்துவிட்ட நிலையில் இதற்கான தேவைகள் அதிகரித்து இப்போது மஞ்சளுக்கு பம்பர் விலை கிடைத்து வருகிறது.
கடந்த ஆண்டுகளுக்கு ஒப்பிடும்போது சுமார் 50 சதவிகித மஞ்சள் விளைவிக்கும் பகுதிகளில் இந்தாண்டு மஞ்சள் பயிரிடப்படவில்லை.இதனால் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து தற்போது குவிண்டால் குறைந்தது 16 முதல் 20 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. நாட்டில் மஞ்சள் விளைவிக்கும் மாநிலங்களில் கர்நாடகா மூன்றாவது இடத்தி ல் உள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பின்னர் நான்காவது இடத்தில் தமிழ் நாடு இருக்கிறது. மஞ்சள் விளையும் மற்ற மாநிலங்களிலும் இந்தாண்டு மஞ்சள் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதால் இதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதது மகாராஷ்டிராவின் .சாங்கிலி மார்க்கெட்டில் தடிமன் மற்றும் மெலிய என்ற வகைகளில் மஞ்சள் தற்போது க்வண்டாளுக்கு 25 மற்றும் 20 ஆயிரத்திற்கு விற்க்கப்பட்டு வருகிறது