மடத்தில் சிறுமியர் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

சித்ரதுர்கா : நவம்பர். 15 – குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எதிர்கொண்டுள்ளது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்காப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குழந்தைகள் பாதுகாப்பு இயக்ககத்திற்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இந்த ஆணையத்தின் தலைவர் நாகண்ணகௌடா ஒடனாடி நிறுவனத்தின் ஸ்டான்லி மற்றும் பரசுராம் ஆகியோர் அளித்துள்ள கடிதத்தின் ஆதாரத்தை வைத்து அறிக்கை அளிக்குமாறு கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர். முருகா மடாதிபதிக்கு எதிராக போக்ஸோ வழக்கு பதிவான பின்னர் மடத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மடத்தில் தொட்டில் மையத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தத்து சட்டநியமங்களை பின்பற்றாமல் சட்ட விரோதமாக குழந்தைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளின் கடமை தவறியுள்ளது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது . முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா ஷரணா தற்போது சிறையில் உள்ள நிலையில் தற்போது இந்த மடத்தின் பொறுப்பாளரான ராஜவம்சத்தை சேர்ந்த பரசுராம நாயக் மடத்தின் மடாதிபதியாக வேண்டும் என வற்புறுத்தல்கள் எழுந்துள்ளது. முருகா மடம் அனைத்து ஜாதி மற்றும் இனத்தவருக்கு சொந்தமானது. அனைத்து இன மக்களின் உயர வேண்டிய எண்ணம் கொண்டவரே இந்த மடத்தின் மடாதிபதியாக தேர்வு ஆக வேண்டும். மடத்தின் கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழுக்களை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும். ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் இது வரை மடத்தில் எந்த பொறுப்பையும் தாங்களாக கேட்டிருக்கவில்லை . ஆனால் இப்போது நிலைமைகள் மாறியுள்ளது. இப்போது மடத்தின் நிர்வாக குழுவில் ராஜவம்சத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என சிலர் தெரிவித்துள்ளனர். போக்ஸோ வழக்கில் சிவமூர்த்தி முருகா ஷரனரூ சிறைக்கு சென்ற பின்னர் பல குழப்பங்கள் மடத்தில் உருவாகியுள்ளது. சிவமூர்த்தி முருகா ஷரனரின் சீடர்கள் தற்போது நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்த கட்டத்தில் ராஜவம்சத்தின் பரசுராம நாயக் மடத்தின் நிர்வகிப்பு குறித்து கருத்துக்கள் தெரிவித்திருப்பது பல வியூகங்களுக்கு இடமளித்துள்ளது. ராஜவம்சத்தினருக்கு காளி மடத்தின் ருஷிகேஷ மடாதிபதி ஆதரவாக உள்ளதாக தெரிகிறது. 300 வருடங்களுக்கு முன்னர் ராஜா பேச்சுகத்தி பரமன்ன நாயக்கர் மடத்தை நிறுவியிருப்பதுடன் ஷாந்த வீர முருகாஸ்ரீகள் மடாதிபதி பொறுப்பை ஏற்றார். பின்னர் நடந்த நாட்களில் இந்த மடம் சித்ரதுர்காவின் காலாச்சார பரம்பரையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.