மடாதிபதிக்கு எதிராக 694 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சித்ரதுர்கா : நவம்பர். 7 – முருகா மடாதிபதிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த இரண்டாவது போக்ஸோ குற்றம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டுள்ள டி வொய் எஸ் பி அணில் தலைமையிலான குழு நகரின் 2வது மாவட்ட மற்றும் செஷன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. போக்ஸோ , வன்முறை மற்றும் ஆன்மீக இடங்களை துஷ்ப்ரயோகம் செய்தது ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் முருகா மடாதிபதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பட்டிருப்பதுடன் 342 பக்கங்களுடம் 2 பகுதிகளாக மொத்தம் 694 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முருகாமடாதிபதி , பெண் வார்டன் ரஷ்மி , செயலாளர் பரமசிவய்யா , மற்றும் மடத்தின் உயரதிகாரி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றப்பத்திரிகையில் வழக்கறிஞர் கங்காதரய்யா ஈடு பட்டிருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை . இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முருகா மடாதிபதி பெண் வார்டன் வாயிலாக சிறுமிகளை அழைத்து கொண்டு தொடர்ந்து பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். தவிர தன்னிடம் வரும் சிறுமிகளுக்கு மருந்து கலந்த கொய்யாப்பழங்களை கொடுத்து சிறுமிகளை தன்னுடைய லீலைகளுக்கு பயன்படுத்திவந்துள்ளார். அலுவலகம் , படுக்கை அரை , மற்றும் குளியலைறைகளுக்கு சிறுமியரை அழைத்து சென்று பாலியல் வன்முறை நடத்தியுள்ளார். இதற்க்கு மறுப்பு தெரிவித்த சிறுமியரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வகையில் மடாதிபதி பத்துக்கும் மேற்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.