மடாதிபதி கார் டிரைவர் கைது

பெங்களூர் : செப்டம்பர் : 16 – எம்எல்ஏ டிக்கெட் மோசடி வழக்கு தீவிரம் அடைந்துள்ளது மடாதிபதியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சைத்ராவிடம் சிசிபி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தொழிலதிபருக்கு பி ஜே பி கட்சியின் எம் எல் ஏ டிக்கெட் கொடுப்பதாக நம்பவைத்து 5 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சி சி பி போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தி ஹாலஸ்ரீ மடாதிபதியின் கார் ஓட்டுனரை கைது உள்ளனர். இதன் மூலம் தலைமறைவாக உள்ள மடாதிபதி எங்கே இருக்கிறார் என்ற தகவலை டிரைவரிடம் கேட்டு வருகின்றனர். இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல தேதி வரும் சைத்ரா கும்தாபுராவிடமும் விசாரணை தீவிரப்படுத்த முற்பட்டுள்ளனர் சி சி பி விசாரணையின்போது நேற்று மயங்கி விழுந்து வாயில் நுரை தள்ளிய சைத்ரா குந்தாபுரா தற்போது விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . இவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளததாக தெரிகிறது . சிகிச்சை முடிந்த பின்னர் அவரை அழைத்து மீண்டும் விசாரணை துவங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் 1.50 கோடி ரூபாய்கள் பெற்று பல் இடங்களில் முதலீடு செய்து தற்போது தலைமறைவாயுள்ள ஹிரேஹடகலி சதகுரு ஷிவயோகி ஹாலஸ்வாமி சன்ஸ்தான மடத்தின் மடாதிபதி அபிநவ ஹாலவீரப்பஜ்ஜாவீண் கார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது . இவர் விசாரணையின் போது அளித்த தகவல்களை வைத்து தற்போது தலைமறைவாயில்ல ஹாலஸ்ரீயைi கைது செய்ய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஹாலஸ்ரீ ஜாமீன் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடக்க உள்ளது . சைத்ரா குந்தாபுரா தொழிலதிபர் கோவிந்த் பாபு என்பவருக்கு பைந்தூரின் பி ஜே பி டிக்கெட் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டை தள்ளி வைத்துள்ளார். டீல் தோல்வியடைந்த பின்னர் பணத்தை திருப்பி கொடுக்க கால அவகாசம் கேட்டு பெங்களூரின் தொழிலதிபர் அலுவலகத்தில் புகார் தாரரை சைத்ரா சந்தித்துள்ளார். சைத்ரா மற்றும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இன்னும் மூன்று குற்றவாளிகள் நகரின் மங்கம்மனபால்யாவின் அலுவலகத்தில் பூஜாரியை சந்தித்திருப்பதுடன் அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் வீடியோ காமிராவில் பதிவாகியுள்ளது . இதற்கிடையில் இந்த விவகாரங்கள் நடந்த இடங்களை சோதனை செய்ய ஏற்கெனவே மங்களூர் சென்றுள்ள அதிகாரிகள் தொழிலதிபரை குற்றவாளிகள் சந்தித்த இடங்கள், பேச்சுவார்த்தைகள் நடந்த இடங்கள் ,மற்றும் பணம் பெற்ற இடங்களை சோதனை செய்து தகவல்களை சேகரித்துள்ளனர். ஏற்கெனவே மோசடி கும்பல் தொழிலதிபரை சந்தித்த பெங்களூரின் நாராயண் குரு கூட்டுறவு வங்கி , கோவிந்த பாபுவின் அலுவலகம் மற்றும் குமாரகிருபாவில் சி சி பி போலீசார் இட சோதனைகள் நடத்தி விசாரணைகள் நடத்தியுள்ளனர் . குமார க்ருபாவில் குற்றவாளிகள் சின்னநாயக் பெயரில் போலி நபரை உருவாக்கி மத்திய தேர்தல் குழு உறுப்பினர் வந்துள்ளதாக அவரை காட்டி ஏமாற்றியுள்ளார். இந்த விவகாரத்தில் சைத்ராவின் நண்பன் ஸ்ரீகாந்துக்கு எதிராகவும் மற்றொரு சட்ட பிரிவு போடப்பட்டுள்ளது. இதே வேளையில் சைத்ரா குந்தபுராண குழுவினரால் ஏமாற்றப்பட்ட கோவிந்த பூஜையை முதலிலிருந்தே சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவர் கஷ்டத்தில் இருக்கும் ஹிந்து தொண்டர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து கொண்டிருந்தார். அப்படி கட்டிய பதினோராவது வீட்டின் கிருஹப்ரவேசம் கடந்த ஜனவரியில் மங்களூரில் மரவந்தேவில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோவிந்தா பாபு பூஜாரியுடன் கௌரிகெத்த மடத்தின் வினய குருஜி சைத்ரா மற்றும் இந்த வழக்கின் மூன்றாவது குற்றவாளி ஹாலஸ்ரீ ஸ்வாமிஜி ஆகியோரும் இருந்தனர். அன்று உரையாற்றிய வினய் குருஜி சைத்ராவை மிகவும் புகழ்ந்துள்ளார். சைத்ராவை தேவி , துர்கை என்றெல்லாம் புகழ்ந்துள்ளார். இவை அனைத்தும் கோவிந்த பூஜாரிக்கு மோசடி நடந்த பின்னர் தெரியவந்துள்ளது.