மடாதிபதி மீது புகார்- போலீஸ் தீவிர விசாரணை

சித்ரதுர்கா : ஆகஸ்ட். 29 – சிறுமியருக்கு பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சித்ரதுர்கா முருகா மடத்தின் டாக்டர் சிவமூர்த்தி ஷரணர் விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று காலை அவரை போலீசார் ஹாவேரி மாவட்டத்தின் பங்காபுராவில் கைதுசெய்து சித்ரதுர்காவிற்கு அழைத்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. பின்னர் இது வெறும் வதந்தி என தெரியவந்தது.. இவருக்கு எதிராக போக்ஸோ ( சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்பு சட்டம் ) புகார் பதிவாகியுள்ள நிலையில் மடாதிபதி மடத்திலிருந்து யாரும் அறியாத இடத்திற்கு புறப்பட்டதாக கூறப்பட்டது. . சிறுமிகள் தங்களுக்கு மடாதிபதி பாலியல் கொடுமைகள் செய்தது குறித்து மைசூரில் உள்ள ஒடநாடி இயக்கத்தில் புகார் அளித்து புலம்பியுள்ளனர். மைசூரின் நசர் பஜார் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் பதிவானது .
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஸ்ரீமுருக ராஜேந்திராமடம் மிகவும் பிரபலமானது. அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்று மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணருவிடம் லிங்க தீட்சை பெற்றார். இந்நிலையில் மடத்தின் சார்பில் நடத்தப்பட்ட விடுதியில் தங்கிப் படித்த 16 வயதான 2 சிறுமிகள் அங்கிருந்து வெளியேறி மைசூருவில் உள்ள சேவா சம்ஸ்தேவில் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 26-ல் தஞ்சம் அடைந்தனர்.தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரிடம், மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு உட்பட 3 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முறையிட்டனர். இதையடுத்து சேவா சம்ஸ்தே நிறுவனத்தினர் 2 சிறுமிகளையும் மைசூரு மாவட்ட குழந்தைகள் காப்பக குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் அதன்பின், குழந்தைகள் காப்பக குழு உத்தரவின்படி நாசர்பாத் போலீஸார் மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் இந்த நிலையில் மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது