மடிகேரி -மங்களூர் நெடுஞசாலையில் மித வேக வாகனங்களுக்கு அனுமதி

மடிகேரி : ஜூலை. 24 – மணல் மூட்டைகள் பயன்படுத்திய பின்னர் மடிகேரி – மங்களூர் தேசிய நெடுஞசாலையில் மித வேக வாகனங்களுக்கு அனுமதி கிடைக்கும் என குடகு மாவட்ட பொறுப்பு அமைச்சர் பி சி நாகேஷ் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சி மையத்தின் அருகில் உள்ள மங்களூரு வீதியின் தடுப்பு சுவர்களை அமைச்சர் பார்வையிட்டார். மலைநாடு அருகில் நில சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் உள்ளூர் வாசிகளிடமிருந்து தகவல்களை சேகரித்தார். இந்த தடுப்பு சுவர் தொழில் நுட்பமற்ற ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது . தவிர தாலூகா அதிகாரியின் அலுவலகத்திற்கு சாலையை அமைக்காத காரணத்தால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது. என உள்ளூர் வாசி ஒருவர் அமைச்ச்சரிடம் தெரிவித்தார். இதற்க்கு பதிலளித்த அமைச்சர் பி சி நாகேஷ் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவகையில் கவனம் செலுத்தப்படும். தற்போதைக்கு மணல் மூட்டைகளை அமைக்கும் பணி நடந்து வருவதுடன் , இது குறித்து ஆலோசித்து மேலும் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை அளித்தார் .