மணமான ஒரு வருடத்தில் தம்பதி தற்கொலை


மைசூர், ஏப்.19-
திருமணம் ஆன ஒரு வருடத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது
மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவின் கிருஷ்ணாபூரில் இந்த சம்பவம் நடந்தது.
சந்திரசேகர் (30), கவிதா (18) ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட தம்பதி ஆவர். இவர்களுக்கு ஒரு வருடம் முன்பு திருமணம் நடந்தது இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்ந்து வந்ததாகவும் சிறிய தகராறு ஏற்பட்டு அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்