மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட ராகுல் சபதம்

கல்பெட்டா, ஆக.12-வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரை எரிக்க உங்களுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது என்று பாஜகவுக்கு எதிராக நேரடித் தாக்குதலைத் தொடுத்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் அங்கு அமைதியை நிலைநாட்ட 5 ஆண்டுகள் தேவைப்படும். அங்கு அமைதியை நிலை நாட்டுவோம் என்று சபதம் மேற்கொண்டார். குடும்பம் என்பதன் அர்த்தம் புரியவில்லை என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்சை நேரடியாகத் தாக்கிய அவர், எங்கும் ரத்தம், எங்கும் கொலை, எங்கும் பலாத்காரம் என்று மணிப்பூரில் தற்போதைய நிலை உள்ளது. அதை சரி செய்ய பாடுபடுவேன் என்றார். மீண்டும் எம்.பி., பதவியை பெற்ற பின், தன் தொகுதியான வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு சென்று, கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, பாராளுமன்றத்தில் பிரதமர், 2 மணி நேரம், 13 நிமிடம் பேசியதாகவும், ஆனால் மணிப்பூர் குறித்து இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும் குற்றம் சாட்டினார். மணிப்பூரில் பாரத மாதா’ கொல்லப்பட்டதைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுகிறீர்கள். இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம், இந்தியா என்ற எண்ணத்தை எப்படி மதிக்கவில்லை, ஏன் அங்கு செல்லவில்லை, ஏன் செய்யவில்லை” என்று பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். மணிப்பூரில் வன்முறையை தடுக்க முயற்சித்தீர்களா? நீங்கள் ஒரு தேசியவாதியாக இல்லை. இந்தியா என்ற எண்ணத்தைக் கொல்பவர் தேசியவாதியாக முடியாது என்று ராகுல் காந்தி ஆபீஸ்மாக குறிப்பிட்டார்