புதுடெல்லி, செப்டம்பர் 28- மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளுக்கு சிபிஐ நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது m
விசாரணை நோக்கங்களுக்காகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்காகவும் மணிப்பூரில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்லும் சிபிஐ குழுக்களின் பாதுகாப்புப் பொறுப்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறப்பு இயக்குனர் அஜய் பட்நாகர் தலைமையிலான சிபிஐ குழு இம்பாலுக்கு வந்து, இரண்ட மாணவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை விசாரித்து வருகிறது.
சிபிஐ அதிகாரியின் விரைவான விசாரணை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிஆர்பிஎஃப் வீரர்கள் சிபிஐ குழுவினருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் . இந்த நிலையில் 2 இளம் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் இழுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.