மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை முதலிடம்

மும்பை: ஏப்ரல். 28
ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 8,428 கோடி ருபாயுடன் 3-வது இடத்திலும், லக்னோ 8,236 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளது.டெல்லி 7,930 கோடி ரூபாயுடன் 5வது இடத்திலும், பெங்களூரு 7,853 கோடி ரூபாயுடன் 6-வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் 7,662 கோடி ரூபாயுடன் 7-வது இடத்திலும், ஐதராபாத் 7,432 கோடி ரூபாயுடன் 8-வது இடத்திலும் உள்ளது.பஞ்சாப் 7,087 கோடி ரூபாயுடன் 9-வது இடத்திலும், குஜராத் 6,512 கோடி ரூபாயுடன் 10-வது இடத்திலும் உள்ளது.