மதுபான பார் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் சுட்டு பிடிப்பு

பெங்களூரின் அக்டோபர் 17 பெங்களூர் பிரிகேட் ரோடு அருகே ஆர்.எச்.பி சாலையில் உள்ள மதுபான பார் உரிமையாளர் மனீஷ் ஷெட்டியை சுட்டுக் கொன்ற கும்பலை 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர் இவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் கால்களில் குண்டு பாய்ந்தது. இவர்கள் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரிவு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்..
மத்திய பிரிவு டி.சி.பி எம்.என் அனுச்செட் இந்த தகவலை கூறினார்..
நகரின் சாந்திநகர் கல்லறை அருகே இவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை போலீசார் பிடிக்க சென்றனர் அப்போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர் . .
காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.. மணீஷ் ஷெட்டியை துப்பாக்கிபால் சுட்டுக்கொன்ற வழக்கில் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களில் வந்த இந்த கும்பல் பார் உரிமையாளரை சுட்டுக் கொண்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது