மதுரை கோவில்களில் கர்நாடக கவர்னர் சிறப்பு பூஜை

மதுரை,மார்ச் 14-
கர்நாடக கவர்னர் தவர்சந்த் கெலாட், அவரது பேரன் நவீன் கெலாட் உடன் மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்தார். முதலில் மதுரையில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
பின்னர் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் கவர்னர் தனது பேரனுடன் கலந்து கொண்டு தலைமை மீனாட்சி அம்மனை வழிபட்டார்.
பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்றார். இந்தக் கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். கர்நாடக கவர்னர் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன