மது விற்ற 6 பேர் கைது

கரூர் , மார்ச்3- கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குளித்தலையை சேர்ந்த கணபதி (வயது 43), ரமேஷ் (34), வெள்ளைச்சாமி (43), சமத்துவபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (43), ஆண்டாங்கோவிலை சேர்ந்த முனுசாமி (55), புன்னம் சத்திரத்தை சேர்ந்த திருமூர்த்தி (65) ஆகிய 6 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 68 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.