மத்திய அரசுக்கு எதிராக சித்து ஆவேசம்

பெங்களூரு, பிப். 5- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநிலத்திற்கான, மத்திய அரசின் மானியம் மிகவும் குறைவாக உள்ளது. வரும் 7 ஆம் தேதி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்த போராட்ட‌ அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. மத்திய அரசு, மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராட உள்ளோம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
விதான்சவுதாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை மாலை டெல்லியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்று போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசு, மாநிலத்திற்கு செலுத்த வேண்டிய மானியம் மிகவும் குறைவாக உள்ளதாக சித்தராமையா மத்திய அரசுக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
14வது நிதி ஆணையத்தில் வரி 4.1 ஆக இருந்தது. 15வது நிதி ஆணையத்தில் 3.64 வரி. 62 ஆயிரத்து 98 கோடி பணம் நிலுவையில் உள்ளது. இது மத்திய அரசு இழைக்கும் அநீதியை காட்டுகிறது. மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி வரியில் மாநிலத்தின் பங்கு வரவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.மத்தியில் ஆளும் கட்சியை கடுமையாக தாக்கிய முதல்வர், மாநில பாஜக தலைவர்கள் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியங்கள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை என்றும், மகாராஷ்டிராவைத் தவிர, கர்நாடகாவில் இருந்து அதிக வரி செலுத்தப்படுவதாகவும் கூறினார்.இதுவரை மத்திய அரசிடம் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. நாட்டிலேயே வரி செலுத்துவதில் கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது. ஆனால், நமக்கு அளிக்க வேண்டிய வரிப்பணத்தின் பங்கு ஏமாற்றப்படுவதாக புள்ளி விவரங்களுடன் விளக்கமளித்தார்.மத்திய பட்ஜெட்டின் அளவு அதிகரிக்கும் போது, மாநிலத்திற்கான மானியம் அதிகரிக்க வேண்டும். நமது வரிகள் இரட்டிப்பாகியிருக்க வேண்டும். ஆனால், இந்தப் பணத்தை மத்திய அரசு தன்னிடம் வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.