மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி , மார்ச் -7 -சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, சமூக வலைத்தளங்களில் ஒரு பொருளையோ அல்லது சேவையோ பிரபலங்கள் ஆதரித்து பேசும் போது பார்வையாளர்கள் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை கடைபிடிப்பதை உறுதி செய்ய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.