மத்திய அரசு ஆலோசனை

சென்னை: ஜன.22-
தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
கடந்த வருட தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் அவரின் தனி தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் வெற்றிபெற்றது.
கடலுக்கு அடியில் ராமர் பாலமே இல்லை என நாடாளுமன்றத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்தே தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த திட்டத்தை பாஜக சட்டசபையில் கடுமையாக எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவும் இந்த திட்டத்தை ஆதரித்தது. கடல் பாலம்: இந்த சேது சமுத்திர திட்டம் இன்னும் தொடங்காத நிலையில், தற்போது தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்..