மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு

டெல்லி: ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அடிப்படை ஊதியத்திலும் உயர்வினை பெற இருக்கின்றனர். தி ஃபைனாசியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான
பேசிக் பே எனப்படும் அடிப்படை ஊதியம் 9,000 ரூபாயாக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அதேபோல வரும் ஜூலை மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி ஆகியவற்றை அடிப்படை ஊதியத்துடன் ஒன்றிணைக்க உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை விலைவாசி ஏற்றம் மற்றும் பணவீக்கத்துக்கு ஏற்ற வகையில் ஊதியத்தில் குறிப்பிட சதவிகிதத்தை உயர்த்தி வழங்குவது ஆகும். அந்த வகையில் நடப்பாண்டில் 4 % முதல் 50% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. இது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைய
இருக்கின்றனர்.
வரும் ஜூலை மாதமே அகவிலை படியுடன் அடிப்படை ஊதியமும் ஒன்றிணைக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான உடனே மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இவை அமலுக்கு வரும்.