மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்

புதுடெல்லி: ஜூலை.10-
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தில் இரு நாடுகளின் நட்புறவு மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகம் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான திட்டத்தை முழு பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.
ஜூலை 22ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், 2024-25ம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் முக்கியமான
பட்ஜெட் அறிக்கையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வால் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்
விதமாக இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 23 ஆம் தேதி காலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஜூலை 22ம் தேதி 2023-24ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.