மத்திய பிரதேசத்தில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள்: மோடி

மத்திய பிரதேசத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துக் கொள்ள இருக்கிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:- இன்று காலை சுமார் 11:10 மணியளவில், முதலீடு மத்திய பிரதேசம் – உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ல் காணொலி மூலம் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த உச்சி மாநாடு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மத்திய பிரதேசத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 நடைபெறுகிறது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

https://www.maalaimalar.com/news/national/tamil-news-pm-modi-tweets-summit-will-showcase-the-diverse-investment-opportunities-in-madhya-pradesh-559371?infinitescroll=1