மந்திரிகள் பதவி விலக டி.கே.சிவகுமார் வலியுறுத்தல்

பெங்களூர் அக்டோபர் 17 மக்களைக் காக்க முடியாவிட்டால் மந்திரிகள் பதவி விலகி வீட்டுக்கு செல்லலாம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது வட கர்நாடக மாவட்டங்களில் பெருமழை பெய்து மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் முக்கியமான மந்திரிகள் யாரும் நேரில் வந்து மக்களை பார்க்கவில்லை நிவாரண பணிகளை முடக்கி விட வில்லை துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் கூறும் போது தனக்கு வயதாகி விட்டதாகவும் கொரோனா இருப்பதாகவும் அதனால் மக்களை நேரில் சென்று பார்த்து நிவாரண பணிகளை செய்ய முடியவில்லை என்று கண்ணீர் விடுகிறார். மக்கள் பணி செய்ய முடியாவிட்டால் மந்திரி பதவியை விட்டு விலகி வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கலாம். செயல்பட முடியாத இந்த அரசால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் வாக்காளர்கள் அளித்த ஓட்டுகளை விலைக்கு வாங்கி இந்த அரசு அமைந்துள்ளது பெங்களூர் ராஜராஜஸ்வரி நகரில் வாக்காளர்கள் அளித்த வாக்குகளுக்கு விரோதமாக அந்த தொகுதி மக்கள் பிரதிநிதியை விலைக்கு வாங்கி இந்த அரசு உருவானது. தற்போது நடைபெறும் இடைத் தேர்தல் முடிவில் இதற்கு பிஜேபி கட்சிக்கு வாக்காளர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் இவ்வாறு டி கே சிவகுமார் கூறினார்