மந்திரி பதவி கிடைக்காத பிஜேபி எம்எல்ஏக்கள் கொந்தளிப்பு

பெங்களூர் ஜன.13- கர்நாடக மந்திரிசபை இன்று மாலை விஸ்தரிக்கப்பட்டது புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் மந்திரி பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் பிஜேபியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மந்திரி பதவி கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த முனிரத்தினா எம்எல்ஏவுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கலால் துறை அமைச்சராக உள்ள நாகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிஜேபி கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அவரும் அதிருப்தி அடைந்துள்ளார் இந்நிலையில் முனிரத்தினம் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் நாகேஷ் ஆகியோர் இன்று பிஜேபி மேலிட பொறுப்பாளர் அருண் சிங் அவர்களை பெங்களூரில் சந்தித்து தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர்