மனைவியின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய கணவன் கைது

பெலகாவி :ஜனவரி. 4 – தனக்கு விவகாரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால்உன்னுடைய ஆபாச விடீயோக்களை வைரல் செய்வதாக தன்னுடைய மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஒருவனை நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றொரு திருமணத்திற்கு தடையாயிருந்த மனைவியிடமிருந்து விவாகரத்து பெற மனைவியின் ஆபாச விடீயோக்களை வைரல் செய்வதாக மிரட்டிய கிரண் பாட்டில் என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. இவன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளான் . இதனால் தனக்கு விவாகரத்து கொடுக்குமாறு மனைவியை நச்சரித்து வந்துள்ளான். தவிர தாங்கள் தனிமையில் இருந்த ஆபாச விடீயோக்களை வைரல் செய்வதாகவும் மிரட்டிவந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி பலமுறை கணவனை சமாதானம் செய்ய முயன்றும் இயலாமல் கணவன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளான் . ஆனாலும் மனைவியை மிரட்டுவதை தொடர்ந்து நடத்தி வந்துள்ளான். இதனால் தனக்கு வேறு வழி தெரியாத நிலையில் மனைவி நேற்று கணவனுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளாள் . மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்து தனக்கு நீதி கிடைக்க கோரிக்கை வைத்துள்ளாள் . போலீசார் கிரனை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியபோது அவனுடைய போனில் மனைவியின் ஆபாச போட்டோக்கள் மற்றும் விடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.