மனைவியின் கள்ள உறவால் மனம் நொந்து கணவன் தற்கொலை

மைசூர் : மே. 26 – மனைவியின் தகாத உறவால் மனம் நொந்து கணவன் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ள துயர சம்பவம் ஹள்ளிகெரேஹுண்டியில் நடந்துள்ளது . இந்த கிராமத்தில் வசித்து வந்த ஷஷிதர் (39) என்பவர் தற்கொலை செய்துகொண்ட கணவனாவார். கம்பி வேலை செய்துகொண்டிருந்த ஷஷிதர் 10 வருடங்களுக்கு முன்னர் பன்னூறு அருகில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டிருந்தார். . இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த பல மாதங்களாக மனைவி வேறொரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விஷயம் கணவனுக்கு தெரிய வந்து எவ்வளவோ புத்திமதி சொல்லியும் மனைவி தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை மனைவியின் இந்த செயலால் மனம் நொந்த ஷஷிதர் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து வருணா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே வேளையில் கடன் தொல்லை தாங்கமுடியாமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கலபுரகி மாவட்டத்தின் ஆலந்தா தாலூகாவின் சாலேகாம் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. மல்லிநாதா பரமேஸ்வரா ஜ்வலகா (60 ) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயி ஆவார். இவர் தன்னுடைய வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருப்பதுடன் இவர் பி கே ஜி பி வங்கியில் 75 ஆயிரம் ரூபாய்கள் விவசாய கடன் மற்றும் 4 லட்ச ரூபாய்கள் தனி கடன்கள் வாங்கியிருந்த நிலையில் இவற்றை திருப்பி செலுத்த முடியாமல் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இறந்த விவசாயிக்கு ஒரு மனைவி , இரண்டு மகன்கள் இருப்பதுடன் இதில் மூத்த மகன் கடந்த சில வருடங்களுக்கும் முன்னர் உடன்நல குறைவால் இறந்துபோயிருப்பதுடன் மற்றொரு மகனுக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லை தவிர இவருக்கு திருமணமான இரண்டு மகள்களும் உள்ளனர்.