மனைவியின் தொல்லை தாங்காமல் கணவன் மற்றும் தாய் தற்கொலை

பெங்களூர்: நவம்பர். 13 – மனைவியின் கொடுமைகளுக்கு வெறுத்துப்போய் கணவன் மற்றும் அவனுடைய தாய் இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ராஜகோபாலநகரின் ஸ்ரீகந்தநகரில் நடந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வந்த பாகியம்மா (57) மற்றும் அவருடைய மகன் ஸ்ரீனிவாஸ் (37) ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் மகனாவர். இறந்து போன ஸ்ரீனிவாசன் பெற்றோருக்கு வயது கடந்திருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஸ்ரீனிவாஸ் மடிகேரியில் இருந்த தன் தந்தை தாயை தான் வசித்து வரும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் இவரின் மனைவி சந்தியாவிற்கு இது பிடிக்கவில்லை. என்னுடைய தந்தை உடல் நலம் சரியில்லாததால் கட்டிலில் படுத்துள்ளார். இதனால் வயதான உன் மாமா மாமியாரை பார்த்துக்கொள்வது யார் , நான் என் மாமனார் மாமியாரை பார்த்துக்கொள்ள முடியாது என சந்தியா கலாட்டா செய்துள்ளாள் . இந்த விஷயமாக நள்ளிரவில் மூன்று மணியளவிலும் கலாட்டா நடந்துள்ளது. அதன் பின்னர் முதலில் தாய் பாகியம்மா தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் ஸ்ரீனிவாசும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று மதியம் வரையில் கதவுகள் திறக்கப்படாத நிலையில் பின்னர் கதவை திறந்து பார்த்த போது இரண்டு பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தற்கொலைகள் குறித்து ராஜகோபாலநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.