மனைவியைக் கொன்று சடலத்தை கால்வாயில் வீசிய கணவன்

மண்டியா : ஆகஸ்ட். 10 – கணவன் ஒருவன் தன்னுடைய மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு இறந்த உடலை கால்வாயில் வீசியுள்ள கொடூர சம்பவம் ஸ்ரீரங்க பாட்டனா தாலூகாவின் அரகேரே என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த பூஜா (28) என்பவர் கொலையுண்டவர். இவருடைய உடலை கால்வாயில் வீகேசி தலைமறைவாயுள்ள கணவன் ஸ்ரீநாத் (32) என்பவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லாரி ஓட்டுநராக ஸ்ரீநாத் 9 வருடங்களுக்கு முன்னர் பூஜாவை திருமணம் செய்து கொண்டிருந்தான். வேலை விஷயமாக அவன் அடிக்கடி ஊர்களுக்கு சென்றுகொண்டிருந்தான். இப்படி ஊருக்கு s போது மனைவிக்கு கள்ள தொடர்பு உண்டானதாக சந்தேகித்துள்ளான். இந்த காரணத்திற்க்காக ஸ்ரீநாத் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் இவர்களுக்குள் சண்டைகள் நடந்துள்ளது. இதே போல் கடந்த 8ன் தேதி வீட்டுக்கு வந்து போதும் இருவருக்குள் சண்டை நடந்துள்ளது. இதுவே தீவிரமாகி பூஜாவை துப்பட்டாவால் கழுத்து நெரித்து ஸ்ரீநாத் கொலை செய்துள்ளான். பின்னர் உடலை மஹாதேவபுரா அருகில் உள்ள கால்வாயில் வீசி விட்டு தலைமறைவாயுள்ளான். பூஜா காணவில்லை என குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்திருந்தனர்.போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் ஸ்ரீநாத்தும் தலை மறைவாயிருந்ததால் அவனே பூஜாவை கொன்றிகுக்கவேண்டும் என சந்தேகம் வலுத்தது . இப்போது மஹாதேவபுரா கால்வாயில் பூஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலை என உறுதிசெய்யப்பட்டுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இப்போது ஸ்ரீநாத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.