
மண்டியா : ஆகஸ்ட். 11 – வேறு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் உடலை கால்வாயில் கணவன் வீசி தலைமறைவான சம்பவம் நேற்று நடந்தது நினைவிருக்கலாம். இந்த சம்பவம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலூகாவின் மண்டியாகோப்ப்பளு என்ற கிராமத்தில் நடந்தது. இந்த கிராமத்தில் வசித்துவந்த பூஜா (26) என்பவர் கொலையுண்டவர். இந்த கொலையை செய்து தப்பியோடியிருந்த பூஜாவின் கணவன் ஸ்ரீநாத் (33) தற்போது அரகேரே போலீசில் சரணடைந்துள்ளான். பூஜா மற்றும் ஸ்ரீநாத் 9 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆரம்பத்தில் இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில நாட்களாக பொஜ்ஜவுக்கு டிக் டாக் மோகம் இருந்துள்ளது. இதில் ரீல்ஸ் செய்வதுடன் நண்பர்களுடன் சேட்டிங்க் மோகத்தையும் வளர்த்துக்கொண்டிருந்துள்ளாள். இவள் மிக அதிகமாக மொபைல் போனை பயன்படுத்துவது தெரிந்த கணவன் ஸ்ரீநாத்துக்கு சந்தேகம் வர தொடங்கியுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் நடந்துள்ளது. வேறு ஆண்களுடன் பூஜா தொடர்புகள் வைத்திருப்பதாக ஸ்ரீநாத் அடிக்கடி பூஜாவிடம் சண்டைகள் போட்டுள்ளான். இப்படி கடந்த 8 அன்று நடந்த சண்டையின்போது ஸ்ரீநாத் பூஜாவை துப்பட்டாவால் கழுத்து இறுக்கி கொலை செய்துள்ளான். கொலை செய்த பின்னர் தன் மாமனாருக்கு போன் செய்து பூஜாவை கொலை செய்துள்ள விஷயத்தை தெரிவித்துள்ளான். மகளின் கொலை குறித்து தெரிந்தும் மாமனார் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மருமகனுக்கு உதவி உள்ளார். பூஜாவின் தந்தை தன்னுடைய மருமகனுடன் சேர்ந்து பூஜாவின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பின்னர் உடலுடன் பாரமான கல்லை கட்டி காவேரி நதியில் வீசியுள்ளனர். பூஜாவை கொலை செய்த பின்னரும் ஸ்ரீநாத் வீட்டிலே இருந்துள்ளான். மகளின் உடலை நதியில் வீசியபின்னர் மாமனார் வழக்கம் போல் ஓட்டல் பணியில் ஈடுபட்டுள்ளார். ஸ்ரீநாத் நிமிஷாம்பா கோயிலுக்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளான். கடவுளை dharisiththa பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து சரணடைந்துள்ளார். தவிர பிணத்தை ஒழித்துக்கட்ட தனக்கு உதவிய மாமனார் பற்றியும் போலீசிடம் தெரிவித்துள்ளான். இவர்கள் இருவரையும் நீதிமன்ற கைதுக்கு ஒப்படைத்து அரகேரே போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.