மனைவியைக் கொன்று ஸ்டேட்டஸ் பதிவிட்டு கணவர் தற்கொலை

சாமராஜநகர்,பிப்.22-
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம் நாகமலையில் இந்த சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட மனைவி பெயர் லட்சுமி. இவர் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எரபையன் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரை விட்டு பிரிந்து நாகமலையில் வேறு ஒருவருடன் வசித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் முனிராஜ் இந்த செயலை செய்தது தெரிய வந்தது.
மனைவி மீது கல்லை தூக்கி போட்டு படுகொலை செய்தது தெரியவந்தது.அவர், ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை வீடியோவாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மொபைல் போனில் பதிவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மகாதேஷ்வர் பெட்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.