மனைவியைக் கொன்ற கணவன் கைது

யாதகிரி, பிப்.22-
சந்தேகத்தின் பேரில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது. யாதகிரி சூர்பூர் தாலுகாவின் திந்தனி கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
வீட்டில் இருந்த மனைவி ஷீலாவிடம் தகராறு ஏற்பட்டு, கணவன், துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை மன்மந்தா மட்டும் செய்யவில்லை. அவருடன் சேர்ந்து தந்தையையும் தாயும் சேர்ந்து கொன்றதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது மனைவியின் கழுத்தில் துணியை கட்டி இழுத்து படுகொலை செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது சூர்ப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளி மன்மந்தை கைது செய்தனர்.