மனைவியை கத்திரியால் குத்திய கணவர் கைது

பெங்களூரு, ஏப். 4: சந்தேகம் கொண்டு மனைவியை கத்தியால் கணவர் குத்தி படுகாயப்படுத்திய‌ சம்பவம் புட்டேனஹ‌ள்ளியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி கணவரின் கத்திக் குத்தால் படுகாயமடைந்த மனைவி விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆபத்தான நிலையில் உள்ளார்.
அண்மையில் எச்எஸ்ஆர் லேஅவுட் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மனைவி, வீட்டில் தனது சக ஊழியரிடம் அலுவலக வேலை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தாராம். இந்த நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் தனது மனைவி, அந்த நபரை கள்ள உறவில் இருப்பதாக‌ சந்தேகத்து, கத்தி மற்றும் கத்தரிக்கோலால் குத்தி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இது குறித்து புட்டனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.