மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

பட்கல், அக். 18-
குடும்பத் தகராறு காரணமாக பற்கள் தாலுக்கா முருதேஸ்வரில் உள்ள தர்மகி சப்பத்தி கிராசில்
கணவரே தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது முருதேஷ்வர், நடவரகேரியில் வசித்து வந்தவர்கள் லோகேஷ் நாயக், – நந்தினி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லோகேஷ் ஒரு சிற்பி.
குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மனைவியே வெளியே ஓடி வந்துள்ளார். இச்சம்பவத்தை பலர் பார்த்துள்ளனர்.
மனைவி நந்தினி உயிர் இழந்தார். பிள்ளைகள் இருவரும் தாய் கொலை செய்யப்பட்டதை பார்த்து கண்ணீரோடு சோகத்தில் மூழ்கினர். கொலையாளியை சிபிஐ அதிகாரிகள் தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்த லோகேஷ் கைது செய்தனர்.
தகவல் அறிந்ததும் முருதேஷ்வர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலை நடந்த இடத்திற்கு சென்று போலீஸ் எஸ்.பி‌. விஷ்ணுவர்தன், டி.எஸ்.பி., ஸ்ரீ காந்தா ஆகியோர் விசாரணை நடத்தினர்.