மனைவியை கொன்றகணவன் போலீசில் சரண்

சிக்கமகளூரு, செப்டம்பர் 6-சமீபத்தில், கோவா சென்றுவிட்டு வீடு திரும்பிய மறுநாளே, கணவன் மனைவியைக் கொன்ற சம்பவம், நகரின் கிறிஸ்டியன் காலனியில் நேற்று இரவு நடந்துள்ளது.
கிறிஸ்டியன் காலனியை சேர்ந்த ஷாமாபானு (34) என்ற மனைவியை கொன்ற கணவர் ஷபீர் அகமது (40) கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.
மனைவி மற்றும் கணவர் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம், குற்றம் சாட்டப்பட்ட ஷபீர் அகமது தனது மனைவி ஷாமாபானுவுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஒருவாரம் கோவாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய மறுநாள், அவரது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார், வீட்டின் சுவர்களில் ரத்தம் படிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஷபீர் கடந்த ஆண்டு ஷாமாபானுவை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், அவரது முதல் மனைவி கொரோனாவால் இறந்தார், சம்பவத்தன்று தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி தனது கணவன் முகத்தில் தலை அணையை வைத்து மூச்சு திணறி கொலை செய்ய முயன்றதாகவும் அதை தடுப்பதற்காக அடித்துக் கொண்டதாகவும் குற்றவாளி போலீஸிடம் கூறியதாக தெரிகிறது.
மாநகர போலீசார் மற்றும் எஸ்பி விக்ரம் அமதே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சையது அலீம் தனது சகோதரி ஷாமாபானுவை அவரது கணவர் ஷபீர் அகமது கொன்றதாக புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தடயவியல் ஆய்வக நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். குற்றவாளி ஷபீர் அகமது காவல் நிலையம் வந்து சரணடைந்தார். கொலைக்கு பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக எஸ்பி விக்ரம் அமதே தெரிவித்தார்.